சவூதி அரேபியாவுக்கு விமான சேவைகளை ரத்து செய்த சர்வதேசங்கள்!
சவூதி அரேபியாவுக்கான விமானச் சேவைகளை சர்வதேசங்க்கள் ரத்து செய்துள்ளதனால் , சவூதி அரேபியா செல்லும் பயணிகாள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.
ஹூதிகளின் தொடர் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களால் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து, இந்திய மற்றும் ஐரோப்பிய விமான நிறுவனங்கள் தங்களின் சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன.

ஹூதி கிளர்ச்சியாளர்களின் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் (ட்ரோன்) தாக்குதல்கள் சவூதி அரேபியா முழுவதும் விமானப் போக்குவரத்தைத் தொடர்ந்து சீர்குலைத்து வருவதால், முன்னணி சர்வதேச விமான நிறுவனங்கள் சவூதி அரேபியாவுக்கான தங்களது விமானச் சேவைகளை நிறுத்தி வைக்கும் காலத்தை நீட்டித்துள்ளன.
ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையம் உள்ளிட்ட சவூதியின் முக்கிய விமான நிலையங்கள், எரிசக்தி மையங்கள் மற்றும் பிற உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து நடத்தப்படும் தொடர்ச்சியான தாக்குதல்களால் பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதால் சர்வதேச விமான நிறுவனங்கள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளன.