கனடாவில் கற்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு நற்செய்தி
கனடாவில் உயர்கல்வி கற்று வரும் வெளிநாட்டு மாணவர்களுக்கு மேலும் சலுகைகள் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடிய குடிவரவு ஏதிலிகள் விவகார அமைச்சர் மார்க் மில்லர் இந்த விடயத்தை அறிவித்துள்ளார்.
பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் மாணவர்களின் வேலை நேரத்தை மேலும் அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பல்கலைக்கழகங்களில் கற்கும் மாணவர்கள் வாரம் ஒன்றிற்கு பணி செய்யக்கூடிய அதிகபட்ச மணித்தியாலங்கள் 20 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மணித்தியாலங்கள் அதிகரிப்பு
இந்த மணித்தியால எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல், வாரம் ஒன்றிற்கு வெளிநாட்டு பல்கலைக்கழக மாணவர்கள் பணி செய்யக்கூடிய நேரம் 24 மணித்தியாலங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கோவிட் பெருந்தொற்று கால பகுதியில் ஊழியப் பற்றாக்குறை காரணமாக லிபரல் அரசாங்கம் 20 மணித்தியால வரையறையை தற்காலிக அடிப்படையில் தளர்த்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நடைமுறை இன்றைய தினம் முதல் ரத்து செய்யப்படுவதுடன் இதன்படி எதிர்வரும் செப்டம்பர் மாதம் வரையில் வெளிநாட்டு மாணவர்கள் வாரமொன்றுக்கு பணி செய்யக்கூடிய மொத்த மணித்தியால எண்ணிக்கை 20 ஆக வரையறுக்கப்படுகின்றது.
கோடை மற்றும் குளிர்கால விடுமுறை காலப்பகுதியில் இந்த நேர வரையறைகள் கிடையாது.