சிட்னியில் பொலிஸாரை மிரட்டியவருக்கு நேர்ந்த துயரம்!
சிட்னிமேற்கில் உள்ள பொலிஸ் நிலையத்தில் பொலிஸாரை கத்தியைகாட்டி மிரட்டிய நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
நள்ளிரவிற்கு பின்னர் அவுபேர்ன் பொலிஸ் நிலையம் சென்ற நபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டியதால் சுட்டுக்கொல்லப்பட்டார் என நியுசவுத்வேல்ஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கி பிரயோகத்தினால் காயமடைந்த நபரிற்கு சிகிச்சை வழங்கி அவரை வெஸ்ட்மீட் மருத்துவமனையில் சேர்த்த போதிலும் அவர் உயிரிழந்துள்ளார்.
இதேவேளைஉயிரிழந்தவர் முன்னர் அந்த பகுதியில் புகையிரத நிலையத்தில் நபர் ஒருவரை கத்தியால் குத்தினார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நபர் எச்சரிக்கையின்றி எந்தகாரணமும்இன்றிகத்தி குத்தில் ஈடுபட்டதுடன் பொலிஸ் நிலையத்தினுள் நுழைந்து கத்தியை காட்டி மிரட்டிய நிலையில் பொலிஸார் அவரை நோக்கி துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.