கனடாவில் உயிருக்கு ஆபத்தான பாக்டீரியா தாக்கம் குறித்து எச்சரிக்கை

Canada
By Kamal Apr 03, 2026 04:07 PM GMT
Report

கனடாவில் அரிதான ஆனால் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய 'இன்வேசிவ் மெனிங்கோகோக்கல்' (Invasive Meningococcal Disease - IMD) எனும் பாக்டீரியா தொற்று பாதிப்பு, கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உச்சத்தை எட்டியுள்ளது.

மூளை மற்றும் தண்டுவடத்தைச் சுற்றியுள்ள சவ்வுகளில் வீக்கம் (மெனிஞ்சைடிஸ்), இரத்த ஓட்டத்தில் தொற்று மற்றும் உறுப்பு செயலிழப்பு போன்ற தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தும் இந்த நோய், தற்போது நாடு முழுவதும் வேகமாகப் பரவி வருவது பொதுச் சுகாதாரத் துறையினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

கனடா பொதுச் சுகாதார முகமையின் (PHAC) தரவுகளின் அடிப்படையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 2021-ல் வெறும் 48 ஆக இருந்த பாதிப்புகள், 2023-ல் 100 ஆக உயர்ந்தன.

கனடாவில் உயிருக்கு ஆபத்தான பாக்டீரியா தாக்கம் குறித்து எச்சரிக்கை | Invasive Meningococcal Disease Rising

தற்போது கிடைத்துள்ள ஆரம்பக்கட்ட தகவல்களின்படி, 2024-ல் 132 ஆகவும், 2025-ல் 155 ஆகவும் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது 2012-ஆம் ஆண்டிற்குப் பிறகு பதிவான மிக உயர்ந்த அளவாகும்.

குறிப்பாக ஒன்டாரியோ, கியூபெக் மற்றும் மேனிடோபா ஆகிய மாகாணங்களில் அதிகப்படியான மரணங்களும் பாதிப்புகளும் பதிவாகியுள்ளன.

இந்தத் தொற்று பாதிப்பு ஏற்பட்டவர்களில் 14 சதவீதம் பேர் உயிரிழப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

பிழைப்பவர்களில் 15 முதல் 20 சதவீதம் பேருக்குக் காது கேளாமை, நரம்பியல் குறைபாடுகள் அல்லது உடல் உறுப்புகளை நீக்க வேண்டிய கட்டாயம் போன்ற நீண்டகால பாதிப்புகள் ஏற்படுகின்றன.

கடுமையான தலைவலி மற்றும் காய்ச்சல், கழுத்து விறைப்பு (Stiff neck), வெளிச்சத்தைப் பார்க்க முடியாமை (Sensitivity to light), வாந்தி, குழப்பமான மனநிலை அல்லது அதிகப்படியான தூக்கம், உடல் முழுவதும் திடீரெனத் தோன்றும் தடிப்புகள் (Rash) போன்ற நோய் அறிகுறிகள் தென்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US