நியூயார்க்கில் நூலிழையில் தவிர்க்கப்பட்ட விமான விபத்து

New York Canada Flight
By Kamal Apr 22, 2026 08:33 PM GMT
Report

நியூயார்க்கின் ஜான் எஃப். கென்னடி (JFK) சர்வதேச விமான நிலையத்தில், அமெரிக்கன் ஏர்லைன்ஸின் ரிபப்ளிக் ஏர்வேஸ் விமானமும், ஏர் கனடாவின் ஜேஸ் ஏவியேஷன் விமானமும் வானில் மிக நெருக்கமாக வந்ததாகவும் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

திங்கள்கிழமை மதியம் 2:35 மணியளவில் நடந்த இந்தச் சம்பவம் குறித்து அமெரிக்க விமானசேவை நிர்வாக நிறுவனம் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளது.

இண்டியானாபோலிஸில் இருந்து வந்த அமெரிக்க விமானம், தரையிறங்க வேண்டிய பாதையைத் தவறி, பக்கவாட்டு ஓடுதளத்தில் தரையிறங்கத் தயாராக இருந்த ஏர் கனடா விமானத்திற்கு மிக அருகில் சென்றது.

ஒரு கட்டத்தில் இவ்விரு விமானங்களுக்கும் இடையே செங்குத்தாக வெறும் 106.68 மீட்டர் இடைவெளி மட்டுமே இருந்தது.

நியூயார்க்கில் நூலிழையில் தவிர்க்கப்பட்ட விமான விபத்து | Investigating After American Jet Flew Too Close

இரு விமானங்களிலும் இருந்த எச்சரிக்கை கருவிகள் ஒலியெழுப்பியதால் விமானிகள் உடனடியாகச் சுதாரித்துக் கொண்டனர்.

விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், மோதல் அபாயத்தை உணர்ந்து உடனடியாக இரு விமானிகளுக்கும் அவசர உத்தரவுகளை வழங்கினர். ஏர் கனடா விமானத்தை உயரத்திற்குப் பறக்கும்படியும், அமெரிக்க விமானத்தை அதே உயரத்தில் நீடிக்கும்படியும் அவர்கள் அறிவுறுத்தினர்.

அந்தச் சமயத்தில் கட்டுப்பாட்டு அறையில் அபாய ஒலிகள் (Alarms) கேட்டது அங்கிருந்த ஆடியோ பதிவுகள் மூலம் உறுதியானது.

இரு விமானங்களும் உடனடியாகத் தரையிறங்கும் முயற்சியைக் கைவிட்டு (Go-around), மீண்டும் வானில் சுற்றிச் சென்று பின்னர் பாதுகாப்பாகத் தரையிறங்கின.

"பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து எங்கள் விமானிகள் மிகச் சரியாகச் செயல்பட்டனர்" என்று விமான நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன்புதான் லாகார்டியா விமான நிலையத்தில் நடந்த விபத்தில் இரண்டு விமானிகள் உயிரிழந்த நிலையில், தற்போது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US