யேல் பிரதான சாலையில் கண்டெடுக்கப்பட்ட இளம் பெண்ணின் சடலம்: கொலையா? விபத்தா?
யேல் அருகே பிரதான சாலை 1ல் புதனன்று கண்டெடுக்கப்பட்ட இளம் பெண்ணின் சடலம் தொடர்பில் விசாரணை அதிகாரிகள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
ஹோப் மற்றும் யேல் இடையேயான பிரதான சாலைக்கு அருகே காணப்பட்ட மனித உடல் தொடர்பில் வாகன சாரதி ஒருவர் தகவல் அளித்துள்ளார்.
தகவலை அடுத்து சம்பவப்பகுதிக்கு விரைந்த பொலிசார், குறித்த உடலை கைப்பற்றியதுடன், சடலமாக மீட்கப்பட்டவர் 19 வயதான Melissa Elizabeth Steele என்பதையும் அடையாளம் கண்டனர்.
வான்கூவர் பகுதியில் நன்கு பரிச்சயமானவர் மரணமடைந்துள்ள Melissa Elizabeth Steele என கூறியுள்ள விசாரணை அதிகாரிகள், உடற்கூராய்வு அடுத்த வாரம் நடைபெறும் எனவும், அதன் பின்னரே விரிவான விசாரணை முன்னெடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
மேலும், ஸ்டீலின் மரணம் குறித்து எந்த முக்கிய விவரங்களையும் புலனாய்வாளர்கள் வெளியிடவில்லை. அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அதிகாரிகள் தரப்பு கூறுவதன் காரணம் தொடர்பிலும் பதில் கூற மறுத்துள்ளனர்.
ஸ்டீல் தொடர்பில் தகவல் தெரியவரும் பொதுமக்கள் இந்த வழக்கு தொடர்பில் பொலிசாருக்கு உதவ முன்வர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.