முதலாளியை ஏமாற்றி கேம் விளையாடிய நபருக்கு நீதிமன்றம் தண்டனை
அமெரிக்காவில் முதலாளியை ஏமாற்றி வீடியோ கேம்களை விளையாடிய மற்றும் போகிமான் கார்ட்களை கொள்வனவு செய்த நபருக்கு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.
குறித்த நபர் 140,000 அமெரிக்க டாலர்களுக்கு மேல் மதிப்புள்ள போகிமான் கார்டுகள் மற்றும் வீடியோ கேம்களை வாங்கி மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
ஐயோவாவைச் சேர்ந்த ஒரு வில்லியம் கிராஸ் என்ற நபரே இவ்வாறு மோசடியில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சிறைத்தண்டனை
இந்த மோசடிக்காக குறித்த நபருக்கு எதிராக நான்கு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 செப்டம்பர் முதல் 2022 அக்டோபர் வரை, கிராஸ் தனது முதலாளியான ருவான் டிரான்ஸ்போர்ட்டேஷன் கார்ப்பரேஷனை ஏமாற்றியது தெரியவந்தது.
அவர் நிறுவனத்தின் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி வர்த்தக கார்டுகள், வீடியோ கேம் பாகங்கள் மற்றும் முன்கூட்டியே பணம் செலுத்தப்பட்ட பரிசு அட்டைகளை கொள்வனவு செய்துள்ளார்.
கிராஸ் போலியான ரசீதுகளை சமர்ப்பித்து, மோசடியான கட்டணங்களை செலவு அறிக்கைகளில் தவறாக வகைப்படுத்தி, அவை நியாயமான வணிகச் செலவுகளாக தோன்றும்படி செய்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.