ட்ரம்ப் அடித்துவிட்ட பொய் ; முற்றாக மறுக்கும் ஈரான்
ஈரானில் பொருளாதார நெருக்கடி காரணமாக விலைவாசி கடுமையாக அதிகரித்தது. இதனால் அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் வன்முறையாக வெடித்தது. இதனால் பலர் உயிரிழந்தனர்.

மரண தண்டனை
போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டால், ஈரான் மீது தாக்குதல் நடத்துவோம் என டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்திருந்தார். இதனால் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் போர் பதற்றம் நிலவியது.
இதற்கிடையே தன்னுடைய தலையீடு காரணமாக ஈரான் 800 பேரின் மரண தண்டனையை நிறுத்தியுள்ளது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், டிரம்ப் சொல்வது பச்சைப் பொய் என ஈரான் தலைமை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில் "ட்ரம்ப் சொல்வது தவறானது. அப்படிப்பட்ட எந்த எண்ணும் இல்லை. மேலும் நீதித்துறை அப்படிப்பட்ட எந்த முடிவையும் எடுக்கவில்லை" என்றார்.