கடற்படை உளவுத்துறைத் தலைவர் மரணத்தை உறுதி செய்த ஈரான்
இஸ்ரேல் தாக்குதலில் கடற்படை உளவுத்துறைத் தலைவர் மரணத்தை ஈரான் உறுதி செய்தது.
ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC), தனது கடற்படை உளவுத்துறை இயக்குநரகத்தின் தலைவர் பெஹ்னம் ரெசாயியின் ( Behnam Rezaei) மரணத்தை உறுதி செய்துள்ளது.

மார்ச் 26 அன்று ரெசாயியை இலக்காகக் கொண்டு ஒரு தாக்குதல் நடத்தப்பட்டதாக, இஸ்ரேலின் அறிக்கையை மேற்கோள் காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் முன்னதாகச் செய்தி வெளியிட்டிருந்தன.
பிராந்திய நாடுகள் முழுவதும் உளவுத் தகவல்களைச் சேகரிக்கும் நடவடிக்கைகளை மேற்பார்வையிடும் பொறுப்பில் அவர் ( Behnam Rezaei) இருந்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், பல்வேறு உளவு அமைப்புகளுடன் ஒத்துழைப்பு முயற்சிகளையும் ரெசாயி ( Behnam Rezaei) முன்னெடுத்துச் சென்றதாக வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.