அமெரிக்காவிடம் போர் நிறுத்தம் கோரவில்லை
ஈரான் தரப்பு போர்நிறுத்தத்தைக் கோரியதாக வெளியான தகவல்களை அந்நாட்டு அதிகாரி ஒருவர் திட்டவட்டமாக மறுத்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஈரான் ஒரு தற்காலிக போர்நிறுத்தத்தை விரும்பவில்லை எனவும், மாறாக இந்தப் போருக்கு ஒரு முழுமையான முடிவையே எதிர்பார்ப்பதாகவும் ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அராக்ஷி தெரிவித்துள்ளார்.
ஈரான் தரப்பு இதே நிலைப்பாட்டைத் தொடர்ந்து வலியுறுத்தி வருவதுடன், குறைந்தது ஆறு மாதங்கள் வரை நீடிக்கக்கூடிய ஒரு நீண்டகாலப் போருக்கு (War of attrition) தாங்கள் தயாராக இருப்பதாகவும் அறிவித்துள்ளனர்.

ஈரானின் பார்வையில், ஒரு தற்காலிக போர்நிறுத்தம் என்பது இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் மீண்டும் தன்னிச்சையாகச் செயல்படும் வாய்ப்பை வழங்கும் என்பதால், அது தங்களுக்குப் பயன் தராது எனக் கருதுகின்றனர்.
எனவே, போரைத் தற்காலிகமாக நிறுத்துவதை விட, அதற்கு ஒரு நிரந்தர முற்றுப்புள்ளி வைப்பதையே ஈரான் இலக்காகக் கொண்டுள்ளது.