அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ட்ரோன் தாக்குதல் ; அதிர வைக்கும் ஈரான்
பஹ்ரைனில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ட்ரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியதாக ஈரானின் புரட்சிகர காவல் படை தெரிவித்துள்ளது.
நேற்று (21) இரவு அல்-ரிஃபா மற்றும் அவாலி இராணுவத் தளங்களில் உள்ள அமெரிக்க கட்டமைப்புகளை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதில் அமெரிக்காவின் 2 பேட்ரியாட் வான் பாதுகாப்பு அமைப்புகள் அழிக்கப்பட்டதாகவும் ஈரான் அறிவித்துள்ளது.

ஈரானிய வான்வழியில் அமெரிக்க ட்ரோன்கள் அத்துமீறி நுழைந்ததற்கு பதிலடியாக இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்தத் தாக்குதல்கள் பொதுமக்களின் பயன்பாட்டிலுள்ள தொழிற்சாலைக் கட்டமைப்புகளை இலக்காகக் கொண்டதாகவும், ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்களை இடைமறித்துள்ளதாகவும் பஹ்ரைன் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
குவைத், பஹ்ரைன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவத் தளவாடங்களை இலக்காகக் கொண்டு ஈரான் கடந்த நவம்பர் 18ஆம் திகதி முதல் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.