மத்திய கிழக்கின் அனைத்து பொருளாதார மையங்களையும் தாக்குவோம் –ஈரான் கடும் எச்சரிக்கை
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல்கள் தொடர்ந்தால், மத்திய கிழக்கில் உள்ள அனைத்து முக்கிய பொருளாதார மையங்களையும் குறிவைத்து கடுமையான பதிலடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஈரானிய புரட்சிப்படையின் படைத்தளபதி எப்ராஹிம் ஜப்பாரி எச்சரித்துள்ளார்.
எங்கள் நாட்டின் முக்கிய மையங்களைத் தாக்க எதிரிகள் முயன்றால், பிராந்தியத்தின் அனைத்து பொருளாதார மையங்களையும் நாம் தாக்குவோம் என அவர் தெரிவித்தார்.
மேலும், உலகளாவிய எண்ணெய் விநியோகத்திற்கு அத்தியாவசியமான ஹோர்மூஷ் நீரிணையை ஈரான் மூடியுள்ளதாகவும் ஜப்பாரி கூறினார்.

“தற்போது உலக சந்தையில் எண்ணெய் விலை 80 அமெரிக்க டாலரை கடந்துள்ளது. விரைவில் அது 200 டாலரை எட்டக்கூடும்,” என்று அவர் தெரிவித்ததாக ஈரானின் செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஹோர்முஸ் நீரிணை வழியாக உலகளவில் விற்பனை செய்யப்படும் எண்ணெயின் சுமார் ஐந்தில் ஒரு பங்கு கடந்து செல்கிறது. தினசரி உலக எண்ணெய் நுகர்வில் சுமார் 20 சதவீதம் — அதாவது சுமார் 20 மில்லியன் பேரல்கள் — இந்த குறுகிய கடற்பாதை வழியாகவே விநியோகிக்கப்படுகிறது.
மேலும், கட்டார் மற்றும் ஐக்கிய அரசு இராச்சியம்ஆகிய நாடுகளில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் திரவ இயற்கை எரிவாயுவின் பெரும் பகுதியும் இதன் வழியே செல்கிறது. ஈரானின் இந்த எச்சரிக்கை சர்வதேச சந்தைகளில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.