லண்டனை குறிவைக்கும் ஈரான்; அச்சத்தை ஏற்படுத்திய அமெரிக்கா!
ஈரானின் ஏவுகணை வரம்பில் லண்டனும் இருப்பதாக அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் (Pete Hexeth ) எச்சரித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் போரில் இணைமாறு பிரித்தானியா மீது ட்ரம்ப் நிர்வாகம் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வரும் நிலையில் இந்த எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
டியாகோ கார்சியாவை நோக்கி இரண்டு இடைத்தூரப் பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஏவப்பட்டதைத் தொடர்ந்து, வெள்ளை மாளிகை அமைச்சரவைக் கூட்டத்தில் ஈரானால் ஏற்படும் அச்சுறுத்தலை பீட் ஹெக்செத் (Pete Hexeth ) வலியுறுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலக்கை எட்டும் முன்னரே முறியடிக்கப்பட்டது
எனினும் அந்த ஏவுகணைகள் இலக்கை எட்டும் முன்னரே முறியடிக்கப்பட்டதுடன், அந்த ஏவுகணை தொடர்பில் ஈரான் தரப்பில் இருந்து பொறுப்பேற்றதாகவும் தகவல் இல்லை. இந்த நிலையில், ஏவுகணை வரம்பு தொடர்பில் ஈரான் இதுவரை கூறியதெல்லாம் பொய் என பீட் ஹெக்செத் (Pete Hexeth ) எச்சரித்துள்ளார்.
மேலும், ஈரானில் இருந்து லண்டன் 4, 000 கி.மீ எனவும் வெனிசுலாவில் இருந்து வாஷிங்டன் 3, 300 கி.மீ எனவும் குறிப்பிட்டுள்ள அவர், நல்வாய்ப்பாக ஈரானுடன் பல காலமாக கூட்டணியில் இருந்த ஒரு நாட்டை ஜனாதிபதி ட்ரம்ப் தமது கட்டுக்குள் கொண்டுவந்தார் என்றார்.
இதனால்,ஈரான் உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலா இல்லையா என்பதை ஜனாதிபதி ட்ரம்ப் நன்கறிந்து வைத்திருக்கிறார் எனவும் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளார்.
அதேவேளை , ஜேர்மன் கடற்படையிடம் இருந்து போர் கப்பல் ஒன்றைக் கடனாக வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்ட பிரித்தானியாவை மிக மோசமாக விமர்சித்த ட்ரம்ப், பிரித்தானிய போர்க்கப்பல் அனைத்தும் தங்களுடன் ஒப்பிடுகையில் வெறும் விளையாட்டு பொம்மைகள் என கூறி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.