ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் ; ஒபாமா மீது பழி சுமத்தும் ட்ரம்ப்
ஒபாமாவின் கொடூரமான ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தை நான் ரத்து செய்யாவிட்டால், ஈரான் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே அணு ஆயுதத்தை வைத்திருந்திருக்கும் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஜனாதிபதி ட்ரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஒபாமாவின் கொடூரமான ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தை நான் ரத்து செய்யாவிட்டால், ஈரான் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே அணு ஆயுதத்தை வைத்திருந்திருக்கும்.
அதை அவர்கள் பயன்படுத்தியும் இருப்பார்கள். ஆனால் நான் அதை நடக்க விடமாட்டேன்.
அது நடப்பதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தால், உலகம் இப்போது முற்றிலும் மாறுபட்ட சூழலை சந்தித்து இருக்கும். நீங்கள் ஒபாமாவையும், தூங்கிக்கொண்டிருக்கும் ஜோ பைடனையும் குறை கூறலாம். இவ்வாறு ஜனாதிபதி ட்ரம்ப் கூறியுள்ளார்.