அமெரிக்கா மீது தாக்குதலுக்கு தயாராகும் ஈரான் ; ட்ரம்பின் எச்சரிக்கையால் வந்த வினை
அணு ஆயுத உற்பத்திக்கு தடை விதிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்தால் குண்டுவீசி தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், அதிநவீன ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்த ஈரான் ஆயத்தமாகியுள்ளது.இது உலக நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொருளாதாரத் தடைகளை நீக்குவதற்காக உலக நாடுகளால் போடப்பட்ட ஒப்பந்தத்தை மீறி, அணு ஆயுத உற்பத்தியை அதிகரித்து வருவதாக ஈரான் மீது குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுக்களை ஈரான் தொடர்ந்து மறுத்து வருகிறது.
எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்
இதனிடையே, ஈரான் அணு ஆயுதங்களை தயாரிப்பதை தடுக்க, புதிய ஒப்பந்தத்தை கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முயற்சித்து வருகிறார். அணு ஆயுத உற்பத்திக்கு தடை விதிக்கும் விதமான, புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது தொடர்பாக ஈரான் பேச்சுவார்த்தைக்கு உடன்பட வேண்டும். தவறினால், ராணுவத்தை பயன்படுத்த வேண்டியிருக்கும், என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.
மேலும், அணு ஆயுத உற்பத்திக்கு தடை விதிக்கும் ஒப்பந்தத்திற்கு உடன்பட மறுத்தால், ஈரான் மீது குண்டுவீசி தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், ஈரான் மீது 2வது கட்ட வரிவிதிப்புகளை சுமத்த வேண்டி இருக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.
ஆனால், ஈரான் அமெரிக்காவுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்த மறுத்து வருகிறது. இந்த நிலையில், அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, தங்களிடம் உள்ள அதிநவீன ஆயுதங்கள் குறித்த வீடியோவை ஈரான் அதிகாரிகள் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
ஈரான் மீது குண்டுவீசி தாக்குதல் நடத்தப்படும் என்று டிரம்ப் எச்சரித்த நிலையில், அமெரிக்க நிலைகள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்த ஈரான் தயாராக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.