அமெரிக்கா உடனான போரில் வென்றது நாங்களே ; ஈரான் ஜனாதிபதி
அமெரிக்காவுடனான போரில் ஈரான் வெற்றி பெற்றதை உலக நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளதாக ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் தெரிவித்துள்ளார்.
இந்தப் போர் முடிவுக்கு வர வேண்டும் என்றும், உலக நாடுகள் ஈரானின் வெற்றியை அங்கீகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், ஈரானின் அணுசக்தித் திட்டங்களை முடிவுக்குக் கொண்டுவருதல் மற்றும் ஹோர்முஸ் நீரிணையைத் திறத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு ஈரானை அடிபணிய வைக்கும் நோக்கில் பொருளாதார அழுத்தங்களை அதிகரிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
இதனிடையே, ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ள நிலையில், மாற்று வழிகள் ஊடாக எரிபொருள் போக்குவரத்தை மேற்கொள்வது குறித்து பிரான்ஸ் மற்றும் சவூதி அரேபியா ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.