அமெரிக்கா தாக்கினால் பெரிய போர் வெடிக்கும் ; ஈரான் உச்ச தலைவர் எச்சரிக்கை
''அமெரிக்கா எங்கள் மீது தாக்குதல் நடத்த ஆரம்பித்தால், பெரிய அளவில் போர் வெடிக்கும் என மேற்காசிய நாடான ஈரானில் நிலவி வரும் பொருளாதார பிரச்னைகள் மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து, கடந்த டிசம்பர் முதல் அங்கு போராட்டம் நடந்து வருகிறது.

பொதுமக்கள் மீதான இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், போர்க்கப்பல்களை ஈரானுக்கு அனுப்பி வைத்துள்ளார். இதனால், பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஈரான் உச்ச தலைவர் கமேனி கூறியுள்ளதாவது,
அமெரிக்கா ராணுவ நடவடிக்கை எடுத்தால், ஈரான் அமைதியாக இருக்காது. இந்த முறை மிகப் பெரிய அளவிலான போராக மாறிவிடும். சண்டையை துவக்கினால், இந்த முறை பிராந்திய அளவில் மிகப் பெரிய அளவுக்கு போர் வெடிக்கும் என அமெரிக்கர்களுக்கு நன்கு தெரியும்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் விடுக்கும் மிரட்டல்களுக்கு எல்லாம் ஈரானியர்கள் ஒருபோதும் அஞ்சமாட்டர் இவ்வாறு அவர் கூறினார்.