ஹிஜாப் அணியாமல் பாட்டு பாடிய பாடகிக்கு 74 கசையடி ; போருக்கு நடுவே ஈரானின் கொடூர முகம்!
பொது ஒழுக்கத்திற்கு எதிரான உள்ளடக்கத்தை தயாரித்து வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட ஈரானிய பாடகி பராஸ்டூ அஹ்மதி மற்றும் அவரது தயாரிப்பு குழுவைச் சேர்ந்த நான்கு பேருக்கு தலா 74 கசையடிகள் வழங்கும் தண்டனையை ஈரான் நிறைவேற்றியுள்ளது.
மேலும், இவர்களுக்கு கலை மற்றும் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்க இரண்டு ஆண்டுகள் தடையும், பயண கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் முஸ்தபா நிலி தெரிவித்துள்ளார்.

கடந்த 2024 டிசம்பர் மாதம் யூடியூபில் வெளியான வீடியோ ஒன்றில், கட்டாய ஹிஜாப் அணியாமல் ஆண் இசைக்கலைஞர்களுடன் இணைந்து பராஸ்டூ அஹ்மதி பாடியதே இந்த வழக்கிற்கு காரணமாகும்.
பொது இடங்களில் பெண்கள் கட்டாயம் ஹிஜாப் அணிய வேண்டும் என்ற ஈரானிய சட்டத்தை மீறியதாக கூறி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேற்கத்திய நாடுகளும் மனித உரிமை அமைப்புகளும் கசையடி தண்டனையை சித்திரவதை என கண்டித்து வரும் நிலையில், ஈரான் அந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளது.