அமெரிக்க போர்க்கப்பலின் தளபதி நீக்கம்!
ஈரான் போர் மற்றும் கடற்படை முற்றுகைக்காக மத்திய கிழக்குக்கு அனுப்பப்பட்டிருந்த USS மைக்கேல் மர்பி போர்க்கப்பலின் தளபதியை, செப்டம்பர் 27 அன்று அமெரிக்க கடற்படை அமைதியாக நீக்கியதாக, USNI நியூஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
"நம்பிக்கை இழப்பு" காரணமாக தளபதி கெய்ட்லின் கன்னிங்ஹாம் விடுவிக்கப்பட்டதாக, மேலதிக விபரங்கள் ஏதுமின்றி கடற்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்ததாக கூறப்படுகின்றது.

ஓகஸ்ட் மாதம் USS ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கி கப்பல் தாக்குதல் குழு புறப்பட்ட பிறகு, இந்தப் போர்க்கப்பல் அப்பகுதியிலேயே தங்கியிருந்து, ஒக்டோபர் நடுப்பகுதியில் அங்கிருந்து வெளியேறியது.
மேலும், 346 நாட்கள் பணியில் இருந்த பிறகு, இந்த வாரம் அது பேர்ல் துறைமுகத்திற்குத் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுவதாக USNI நியூஸ் தெரிவித்துள்ளது.