எந்த ஆக்கிரமிப்பாளரின் கையையும் துண்டிப்போம் ; ஈரானின் கடும் எச்சரிக்கை
எதிரிகள் தவறு செய்தால் அதற்குத் தீர்க்கமான பதில் வழங்கப்படும் என்றும், எந்தவொரு ஆக்கிரமிப்பாளரின் கையையும் துண்டிக்க ஈரான் தயங்காது என்றும் ஈரான் இராணுவத்தின் தலைமைத் தளபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எந்த நாட்டிலும் போராட்டங்கள் என்பது இயல்பானதும் இயற்கையானதும் எனக் குறிப்பிட்டுள்ள ஈரான், ஆனால் மிகக் குறுகிய காலத்திற்குள் போராட்டங்களை அமைதியின்மையாகவும் குழப்பமாகவும் மாற்றுவது அசாதாரணமானது என தெரிவித்துள்ளது.

இதன் பின்னணியில் வெளிநாட்டு தலையீடுகள் இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தையும் ஈரான் முன்வைத்துள்ளது.
மேலும், தேசிய பாதுகாப்பு மற்றும் தேசத்தின் இறையாண்மையை பாதுகாப்பதற்காக என் உயிரைத் தியாகம் செய்யத் தயார் எனவும் ஈரான் தரப்பு தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஈரான் தேசத்திற்கு எதிராக எதிரிகளின் அச்சுறுத்தல் மற்றும் பேச்சுகள் அதிகரித்து வருவதை ஈரான் தீவிர அச்சுறுத்தலாகக் கருதுகிறது என்றும், இவ்வாறான செயல்களுக்கு உரிய பதிலளிக்காமல் விடமாட்டோம் என்றும் கடுமையாக எச்சரித்துள்ளது.