ஈரான் அரசை எதிர்த்து கனடாவில் போராட்டம்
ஈரான் அரசுக்கு எதிர்ப்பை வெளியிட்டு கனடாவின் வான்கூவாரில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டில் தொடரும் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், ஈரான்–கனடியர்கள் சேர்ந்த இரண்டு வெவ்வேறு குழுக்கள் வான்கூவரில் போராட்டம் முன்னெடுத்துள்ளனர்.
1979 முதல் ஈரானை ஆட்சி செய்து வரும் இஸ்லாமிய குடியரசு ஆட்சியால் பாதிக்கப்பட்ட சாதாரண மக்களின் நிலையை வெளிச்சம் போடுவதே இவர்களின் நோக்கமாக இருந்தது என தெரிவிக்கப்படுகின்றது.

இப்போது நடைபெறும் போராட்டங்களுக்கு முக்கிய காரணமாக, ஈரானை ஆட்டிப்படைக்கும் பொருளாதார நெருக்கடி குறிப்பிடப்படுகிறது.
அமெரிக்க டாலருக்கு எதிராக ஈரான் நாணயத்தின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
முன்னதாக நடைபெற்ற ஈரான் போராட்டங்கள் வன்முறையால் ஒடுக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டின் 86 வயதான உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி காமெனெயி, “கலவரக்காரர்கள் தக்க இடத்தில் நிறுத்தப்பட வேண்டும்” என்று சனிக்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரான் போராட்டக்காரர்களுக்கு கனடா அரசியல் தலைவர்கள் ஆதரவு வழங்க வேண்டும் என போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.