டிரம்ப் இன் கருத்துக்கு ஈரான் கால்பந்து அணி கடும் எதிர்ப்பு
உலகக்கிண்ண கால்பந்து தொடரில் ஈரான் பங்கேற்பது "பொருத்தமானது" அல்ல என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறிய கருத்துக்கு ஈரான் கால்பந்து அணி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஈரான் அணி தனது அறிக்கையில் உலகக்கிண்ணம் என்பது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சர்வதேச நிகழ்வு. இதனை ஃபிபா (FIFA) அமைப்பே நிர்வகிக்கிறது . எந்தவொரு தனிப்பட்ட நாடும் அல்ல" என்று சுட்டிக்காட்டியுள்ளது.

மறைமுகமாக அமெரிக்காவை விமர்சித்துள்ளது
ஈரானின் வீரமிக்க புதல்வர்களின் தொடர்ச்சியான மற்றும் தீர்க்கமான வெற்றிகளின் மூலம், இந்தத் தொடருக்கு மிக விரைவாகத் தகுதி பெற்ற அணிகளில் ஒன்றாக ஈரான் திகழ்கிறது என அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
ஈரானை யாராலும் உலகக்கிண்ணத்தில் இருந்து நீக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ள அந்த அணி, "போட்டியில் பங்கேற்கும் அணிகளுக்குப் பாதுகாப்பை வழங்க முடியாத, போட்டியை நடத்துபவர் என்ற பெயரை மட்டுமே கொண்ட ஒரு நாட்டின் அணியை வேண்டுமானால் இந்தத் தொடரில் இருந்து நீக்கலாம்" என மறைமுகமாக அமெரிக்காவை விமர்சித்துள்ளது.
அதேவேளை இந்த ஆண்டு உலகக்கிண்ண கால்பந்து தொடரை அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.