திருமணம் செய்ய மறுத்த ஈரானிய காதலி; அரங்கேறிய கொடூரம்!
ஜேர்மனியில் தன்னை திருமணம் செய்ய மறுத்த ஈரானிய காதலியை கொலை செய்த ஈராக் இளைஞனுக்கு ஜேர்மனியில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஜியாட் எஸ் (25) என்ற சந்தேகநபர் ,கடந்த 2019 பிப்ரவரி 16, அன்று இறைச்சி வெட்டும் கத்தியால் குத்தி அவரது காதலி ஃபதேமே பி (28) என்பவரை கொன்றதாக, ஜேர்மனியில் விசாரணையை சந்தித்து வந்தார்.
ஜேர்மனியின் ஃபெடரல் கோர்ட் ஒஃப் ஜஸ்டிஸ் விசாரணையின் பின்னர், ஜியாட்டுக்கு 12 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனை மென்மையானதாக கருதப்பட்ட பின்னர், வழக்கின் மறு விசாரணையில் டிசம்பர் 20 அன்று அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
இந்நிலையில் சந்தேகநபரான ஜியாட் எஸ்15 ஆண்டுகளுக்குப் பிறகுதான் பரோலுக்குத் தகுதி பெறுவார். பெண்ணின் கழுத்தில் காணப்பட்ட ஆழமான வெட்டு ‘தலையை துண்டிக்க முயன்ற தோற்றத்தைக் குறிப்பதாக நீதிபதி கெசின் புருங்கோ நீதிமன்றத்தில் கூறினார்.
இறப்பதற்கு முன் மூன்று மாதங்கள் மட்டுமே ஜியாட்டுடன் உறவில் இருந்த ஃபதேமே, தனது காதலனின் திருமண முன்மொழிவுகளை மறுத்த நிலையில் , ஜியாட் அவரைக் கொல்ல முடிவு செய்தார்.
பிப்ரவரி 16, 2019 அன்று மாலை, ஃபதேமேவை, ஜியாட் தனது காரில் கிராமப்புறங்களுக்கு அழைத்து சென்று, மறைத்து வைத்திருந்த 15 சென்டிமீட்டர் நீளமுள்ள இறைச்சிக் கத்தியை பயன்படுத்தி கொன்றார்.
இதன்போது அவரது கழுத்தில் 34 கத்திக் காயங்கள் மற்றும் பலத்த காயங்கள் காணப்பட்டன. ஃபதேமாவை கத்தியால் குத்தியதை அவர் ஒப்புக்கொண்டார், எனினும் பாதிக்கப்பட்டவர் வேண்டுமென்றே அவரைத் தூண்டிவிட்டதால் பொறாமையால் அவ்வாறு செய்ததாகக் கூறினார்.
ஃபதேமியின் தந்தை கெய்ரோல்லா (60), மற்றும் சகோதரி சாரா (24), இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஜியாத்தின் ஆணவக் கொலைக்கான ஆரம்ப தண்டனையின் மீது அதிருப்தியை வெளிப்படுத்தியதுடன் அவரை ஒருபோதும் சிறையில் இருந்து விடுவிக்கக்கூடாது என்று கூறினர்.
2019 இல் ஃபதேமேயின் இறுதிச் சடங்கில், பாதிரியார் பேசுகையில்,
ஃபதேமே தனது குடும்பம் இல்லாமல் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஜெர்மனிக்கு வந்திருந்தார். இங்குள்ள நண்பர்கள் அவருக்கு குடும்பத்தைப் போல் இருந்தனர் என்றார்.
இந்நிலையில் லூபெக் பிராந்திய நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவரை கொலைக்குப் பதிலாக ஆணவக் கொலைக் குற்றவாளி என்று தீர்ப்பளித்தது,
மேலும் குற்றம் சாட்டப்பட்டவர் ‘வேண்டுமென்றே கொலை செய்தார், ஆனால் நயவஞ்சகமாக அல்ல’ என்று நீதிமன்றம் அவருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்த நிலையில், , அந்த தண்டனை தற்போது இரத்து செய்யப்பட்டு ஜியாட் எஸ் என்ற சந்தேகநபருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.