அலி கமேனியின் மரணத்தை உறுதிப்படுத்திய ஜனாதிபதி ட்ரம்ப் ; வீதிகிறங்கி கொண்டாடும் ஈரானியர்கள்
ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி உயிரோடு இருப்பதற்கான அறிகுறிகள் இல்லை என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.இந்நிலையில், அயத்துல்லா கமேனி கொல்லப்பட்டார் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் சமூக ஊடகங்கள் மூலம் உறுதிப்படுத்தி உள்ளார்.
இச்செய்தி கிடைத்ததன் பின்னர் மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தொடர்பான காணொளிகளும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

தீய மனிதர்களில் ஒருவர்
அயத்துல்லா கமேனி கொல்லப்பட்டார் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் சமூக ஊடகங்கள் மூலம் உறுதிப்படுத்தி உள்ளார் இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
வரலாற்றில் மிகவும் தீய மனிதர்களில் ஒருவரான கமேனி உயிரிழந்துவிட்டார். இது ஈரான் மக்களுக்கு மட்டுமின்றி உலகளவில் காமேனியின் ரத்தவெறி கும்பலால் கொல்லப்பட்ட மக்களுக்குமான நீதி. அமெரிக்காவின் உளவுத்துறை மற்றும் அதிநவீன கண்காணிப்பு அமைப்புகளில் இருந்து அவரால் தப்பிக்க முடியவில்லை.
இஸ்ரேலும் நெருக்கமாகப் பணியாற்றியதால், அவராலும், அவருடன் கொல்லப்பட்ட மற்ற தலைவர்களாலும் எதுவும் செய்ய முடியவில்லை. ஈரானிய மக்கள் தங்கள் நாட்டைத் திரும்பப் பெறுவதற்கான மிகப்பெரிய வாய்ப்பு இது.
கமேனியின் கொலை மட்டுமல்ல, நாடே ஒரே நாளில் சுத்தம் செய்யப்பட்டது. மத்திய கிழக்கில் முழு அமைதி என்ற நோக்கத்தை அடையும்வரை துல்லியமான தாக்குதல்கள் தொடரும் என தெரிவித்துள்ளார்.