அமெரிக்க கொடிகளை எரித்த ஈரான் மக்கள்
ஈரானில் இஸ்லாமிய புரட்சி நாளின் 43ஆம் ஆண்டு நிறைவு விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
இந்நிலையில் அமெரிக்க ஆதரவுடன் பதவியில் இருந்த ஷா மொகமத் ரெஸா பாஃலவியை, ஆட்சியை விட்டு அகற்றிய நாளையே இஸ்லாமிய புரட்சி நாளாக ஈரானியர்கள் கடைபிடித்து வருகின்றனர்.
இதனையொட்டி, தெஹ்ரான் நகர தெருக்களில் நடைபெற்ற பேரணி, வாகன அணி வகுப்பு ஆகியவற்றில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
இதில் சிலர் அமெரிக்க கொடியை காலில் போட்டு மிதித்தும், தீயிட்டுக் கொளுத்தியும் முழக்கங்கள் எழுப்பினர்.
இதன்படி அணு ஆயுத ஒப்பந்தத்தை புதுப்பிக்க வேண்டும் என்று, அமெரிக்காவிடம் கோரிக்கை விடுத்து வரும் அதே நேரத்தில், ஏவுகணை சோதனை, அமெரிக்க கொடி எரிப்பு போன்ற செயல்களும் ஈரானில் தொடர்வது குறிப்பிடத்தக்கது.