ரஷ்ய அதிபர் புடினுக்கு புற்றுநோயா?
ரஷ்ய அதிபர் புடின் உடன் அடிக்கடி வைத்தியர் ஒருவர் இருப்பதை காண முடிகிறது , இதனால் புடினின் உடல்நிலை என்ன என்ற கேள்வி எழுந்தது.
அறுவைசிகிச்சை நிபுணர் எவ்ஜெனி செலிவனோவ்(Yevgeny Selivanov ) புடினின் வீட்டிற்கு குறைந்தது 35 முறை சென்றதாக கூறப்படுகிறது. இவர் தைராய்டு புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர். ரஷ்ய ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன. ரஷ்யாவில் தற்போது தடை செய்யப்பட்டுள்ளதால், தற்போது வெளிநாட்டில் இருந்து ஊடகங்கள் இயங்கி வருகின்றன.
எனவே, புடினுக்கு ஸ்டெராய்டுகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதனாலே அவரது கழுத்து மற்றும் முகம் வீங்கியிருப்பதாக ஒரு கருத்து உள்ளது. மறுபுறம், புடின் தைராய்டு புற்றுநோயில் வெளிப்படையாக ஆர்வம் காட்டுவதாக செய்திகள் உள்ளன.
ஜூலை 2020 இல், புடின் தேசிய தைராய்டு சிகிச்சை மையத்தின் தலைவரான இவான் டெடோவைச்(Ivan Dedov) சந்தித்து தைராய்டு புற்றுநோயைப் பற்றிக் கேட்டார். புடினின் மூத்த மகள் மரியா, இவான் டெடோவின் கீழ் பணிபுரிகிறார்.
இந்த தகவலை வெளியிட்ட ரஷ்ய ஊடகம் ஒன்றே, உக்ரைன் போருக்கு புட்டினின் உடல் நலக்குறைவுதான் காரணம் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.