ரஷ்யாவின் தள்ளுபடியில் இப்படியொரு விஷயம் இருக்கா?அதிர்ச்சியில் அமெரிக்கா!
ரஷ்யா தனது வர்த்தகத்தை மேம்படுத்து இந்தியா உடனான வர்த்தகத்தை மேம்படுத்த இந்தியாவுக்கு 35 டாலர் தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் அளிப்பது மட்டும் அல்லாமல் ரூபாய் - ரூபிள் நாணய பரிமாற்றத்தில் அளிக்க முடிவு செய்துள்ளது. இதனால் அமெரிக்கா அதிர்ச்சி அடைந்தது மட்டுமல்லாமல் பல எச்சரிக்கையை அடுத்தடுத்து வெளியிட்டு வருகிறது.
ஐரோப்பிய நாடுகள் உக்ரைன் மீது போர் தொடுத்த பின்பு ரஷ்யா மீது அமெரிக்காவுடன் சேர்ந்து ஐரோப்பிய நாடுகளும் கடுமையான தடைகளை விதித்தது. ஆனால் இன்றும் ஐரோப்பா ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து எரிபொருள், எரிவாயுவை வாங்கிக்கொண்டு இருக்கிறது, ஆனால் அமெரிக்கா இந்தியாவுக்கு மட்டும் எச்சரிக்கை விடுத்து வருகிறது.
இரண்டு முக்கிய விஷயம் அமெரிக்காவின் இந்த மாறுபட்ட மனநிலைக்கு முக்கியக் காரணம் ரஷ்யா உடனான ரூபாய்- ரூபிள் நாணய வர்த்தகம் மற்றும் ரஷ்யா மத்திய வங்கியின் SPFS பேமெண்ட் முறை பயன்படுத்தத் திட்டமிட்டு வருவது தான்.
இதை மட்டும் செய்தால் அமெரிக்காவுக்கும் பெரும் இழப்பு ஏற்படுவது மட்டும் அல்லாமல் சர்வதேசச் சந்தையில் ஆதிக்கம் பெரிய அளவில் குறையும். அமெரிக்காவின் ஆதிக்கம் உக்ரைன் போர் மூலம் ரஷ்யாவின் ஆதிக்கத்தையும் வளர்ச்சியைக் குறைக்க அமெரிக்கப் பல தடைகளை விதித்த நிலையில், தற்போது ரஷ்யா தன்னிடம் இருக்கும் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி அமெரிக்காவின் ஆதிக்கத்தைக் குறைக்க முடிவு செய்துள்ளது.
இதன் முதல் படி தான் இந்த ரூபிள் நாணயத்தின் வாயிலாக வர்த்தகப் பரிமாற்றம். இந்தியா மிகப்பெரிய இறக்குமதி நாடு என்பது அனைவருக்கும் தெரியும், இந்திய அரசு பெரும்பாலான இறக்குமதி வர்த்தகத்தை அமெரிக்க டாலரின் வாயிலாகச் செய்யும் வேளையில், கச்சா எண்ணெய் இறக்குமதி போன்ற பல பில்லியன் டாலர் புழங்கும் பிரிவில் ரூபிள் வாயிலாகப் பேமெண்ட் செய்தால் டாலருக்கான டிமாண்ட் குறைந்து அதன் மதிப்பு பெரிய அளவில் குறையும்.
ரஷ்யா இந்தியாவிடம் மட்டும் அல்லாமல் ஐரோப்பா, சீனா, துருக்கி, பிற சோவித் நாடுகள் உடனும் டாலருக்கு பதிலாக ரூபிள் வாயிலாகக் கச்சா எண்ணெய் விற்பனை செய்ய அறிவுறுத்த டாலரை மொத்தமாக ஒதுக்க முடிவு செய்துள்ளது. அமெரிக்காவுக்குப் பெரும் நெருக்கடியாக அமைந்துள்ளது.
SWIFT தளம் இதேபோல் உலக நாடுகள் மத்தியில் பணப்பரிமாற்றம் செய்யும் SWIFT தளத்தைப் பயன்படுத்த அமெரிக்கா ரஷ்யாவுக்குத் தடை விதித்துள்ளது. SWIFT தளம் பெல்ஜியம் நாட்டைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கினாலும் அமெரிக்க இந்தத் தளத்தில் அதிகப்படியான ஆதிக்கம் செலுத்துவது மட்டும் அல்லாமல் டாலர் பரிமாற்றத்தை இதன் மூலம் அதிகளவில் ஆதரித்து வருகிறது.
SPFS பேமெண்ட் நெட்வொர்க் இந்த ஆதிக்கத்தை உடைக்க வேண்டும் என்பதற்காக ரஷ்யா தன் நாட்டு வங்கிகளுக்கு மத்தியில் பயன்படுத்தும் SPFS பேமெண்ட் நெட்வொர்க்-ஐ பயன்படுத்த இந்தியாவுக்கு அனுமதி கொடுத்துள்ளது. இதன் மூலம் அமெரிக்கா, இந்தியா - ரஷ்யா மத்தியிலான பணப் பரிமாற்றத்தைக் கண்காணிக்க முடியாமல் போகும், இது SPFS தளத்தைப் பயன்படுத்தும் அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும்.
டாலர் ஆதிக்கம் ரஷ்யா இவ்விரு திட்டத்தின் மூலம் அமெரிக்கப் பொருளாதாரத்தின் டாலர் ஆதிக்கத்தைக் குறைப்பது மட்டும் அல்லாமல் முக்கியமான பொருளாதார நாடுகள் மத்தியிலான பணப் பரிமாற்றத்தைக் கண்காணிக்க முடியாமல் போகும் நிலை ஏற்பட்டு உள்ளது.
இந்தியா மீது அமெரிக்காவிற்கு இருக்கும் கோபம் இது தான். 35 டாலர் தள்ளுபடி ரூபாய் - ரூபிள் பணப் பரிமாற்றம், SPFS தளம் பயன்பாடு இவ்விரண்டையும் எப்படியாவது இந்தியா பயன்படுத்த வேண்டும், அமெரிக்காவிற்குப் பதிலடி கொடுக்க வேண்டும் என்பதற்காகவே ரஷ்யா ஒரு பேரல் கச்சா எண்ணெய்க்கு 35 டாலர் வரையில் தள்ளுபடி கொடுத்து ஆசை காட்டுகிறது.
இதை ஏற்கக் கூடாது என்பதற்காக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்து வருகிறது.
இந்தியாவின் நிலைப்பாடு ஆனால் இந்தியா இரண்டு பக்கமும் பகையை வளர்த்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளது.