இஸ்ரேலை ஆளப்போவது யார்? ஓரம் கட்டப்பட்ட நெதன்யாகு ; கிங் மேக்கராக அரபு கட்சிகள்!
இஸ்ரேல் பாராளுமன்ற தேர்தலில், ஆட்சி அமைக்க தேவையான 61 இடங்களை யாரும் பெறாததால், அரபு கட்சிகள் கிங் மேக்கராக உருவாகியுள்ளன. இஸ்ரேல் பாராளுமன்ற பொதுத்தேர்தல் முடிந்தநிலையில் 77.7 சதவீதமாக வாக்குப்பதிவு ஆகியுள்ளது.
இது கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத மிக உயர்ந்த சாதனை என கூறப்படும் நிலையில் பதிவான வாக்குகள் தொடர்ந்து எண்ணப்பட்டு வருகிறது. 99 சதவீத வாக்குப்பெட்டிகள் எண்ணப்பட்டுள்ள நிலையில், பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான வலதுசாரி கூட் டணி 54 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.

கிங் மேக்கராக அரபு கட்சிகள்- நவம்பர் 4ம் தேதி இறுதி முடிவுகள்
முன்னாள் இராணுவத் தளபதி காடி ஐசென்கோட் தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணி 48 இடங்களைக் கைப்பற்றி அச்சுறுத்தி வருகிறது. இதனால் ஆட்சி அமைக்க தேவையான 61 இடங்களை எந்த கட்சியும் பெறாத சூழல் ஏற்பட்டுளளது.
அரபு பாராளுமன்றக் கட்சிகள் 18 இடங்களைப் பெறும் எனத் தேர்தல் கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஆட்சி அமைக்க தேவையான 61 இடங்களை யாரும் பெறாததால், அரபு கட்சிகள் கிங் மேக்கராக உருவாகியுள்ளன.
கூட்டணி ஆட்சி தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. அரபு கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க நெதன்யாகு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில்,99% வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில் நவம்பர் 4ம் தேதி அதிகாரப்பூர்வ இறுதி முடிவுகள் வெளியாகவுள்ளன.
அதன் பின்னர் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பார்.
புதிய பிரதமர் தனது பெரும்பான்மையை நிரூபிக்க 28 நாட்கள் அவகாசம் வழங்கப்படும். தேவைப்பட்டால் கூடுதலாக 14 நாட்கள் நீடிக்கப்படலாம். இருப்பினும், இஸ்ரேலின் கடந்த கால அரசியல் சூழலைக் கருத்தில் கொள்ளும்போது புதிய அரசு அமைவதில் பெரும் சவால்களும், காலதாமதமும் ஏற்படும் என்றே அரசியல் வல்லுநர்கள் கணிக்கின்றனர்.
நெதன்யாகுவுக்கு எதிராக எதிர்க்கட்சிக் கூட்டணியும் அரபு கட்சிகளும் இணைந்தால் 67 உறுப்பினர்களின் ஆதரவுடன் புதிய அரசை அமைக்கும் வாய்ப்பு உள்ளது. எனினும், அரபு கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது குறித்து எதிர்க்கட்சி கூட்டணிக்குள் மாறுபட்ட கருத்துகள் நிலவி வருகின்றன.