இஸ்ரேல் இனப்படுகொலையிலும் இனச்சுத்திகரிப்பிலும் ஈடுபடுகின்றது
இஸ்ரேல் இனப்படுகொலையிலும் இனச்சுத்திகரிப்பிலும் ஈடுபடுவதாக இஸ்ரேலின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் மோசே யலூன் (Moshe Ya’alon)குற்றம் சுமத்தியுள்ளார்.
பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது அவர் (Moshe Ya’alon) மேலும் கூறுகையில்,
யுத்த குற்றங்கள் இழைக்கப்படுகின்றன
இஸ்ரேலிய அரசாங்கம் தனது படையினரிற்கு உயிராபத்தை ஏற்படுத்துகின்றது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்குகளை அவர்கள் எதிர்கொள்ளும் நிலையை ஏற்படுத்துகின்றது.
வடகாசாவில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கொமாண்டோக்கள் சார்பில் நான் பேசுகின்றேன்,அங்கு யுத்த குற்றங்கள் இழைக்கப்படுகின்றன .
இதேவேளை தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியில், இஸ்ரேலிய அரசாங்கம் கைப்பற்றுவதற்கும் தன்னுடன் இணைத்துக்கொள்வதற்கும் இன சுத்திகரிப்பினை மேற்கொள்வதற்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
கடும்போக்காளர்கள் காசாவில் யூதகுடியேற்றங்களை ஏற்படுத்த முயல்கின்றதாகவும், ,காசாவின் வடபகுதியில் உள்ள மக்களை காலவரையறையின்றி அங்கிருந்து வெளியேறுமாறு வேண்டுகோள் விடுப்பதாகவும் அவர் (Moshe Ya’alon) தெரிவித்துள்ளார்.