லெபனான் மீது தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல் !
இஸ்ரேல் - ஹமாஸ் போர் முடிவுக்கு வராத நிலையில் லெபனான் மீது தரைவழி தாக்குதலை மேற்கொள்வதற்கு தயாராகிவருவதாக இஸ்ரேல் முப்படை பிரதானி மேஜர் ஜெனரல் ஹெர்ஜி ஹலேவி தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மேற்கொண்டுள்ள வான்வெளிதாக்குதல்கள் ஹெஸ்புல்லா அமைப்பின் உட்கட்டமைப்பினை அழிப்பதை நோக்கமாக கொண்டவை என தெரிவித்துள்ள முப்படை பிரதானி ,
லெபனான் கிராமங்களிற்குள் இராணுவ காலணிகள் நுழையும்
இந்த தாக்குதல்கள் இஸ்ரேல்எல்லையை கடந்து தாக்குதல்களை மேற்கொள்வதற்கு உதவும் வகையில் முன்னெடுக்கப்படுகின்றன என தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் வடபகுதியில் படையினர் மத்தியில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நாங்கள் ஒரு இராணுவநடவடிக்கைக்கு தயாராகிவருகின்றோம் இதன் அர்த்தம் என்னவென்றால் உங்களின் இராணுவகாலணிகள் எதிரியின் பகுதிக்குள் நுழையும்,என அவர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் பொதுமக்கள் மீதான தாக்குதல்களிற்காக ஹெஸ்புல்லா அமைப்பு இராணுவநோக்கங்களிற்காக தயார்படுத்தியுள்ள கிராமங்களிற்குள் உங்கள் இராணுவ காலணிகள் நுழையும் என இஸ்ரேலின் உயர் இராணுவ அதிகாரி தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.