தெற்கு லெபனானில் இஸ்ரேல் கடும் தாக்குதல்
தெற்கு லெபனானில் உள்ள ஹரூஃப் (Harouf) நகரின் புறநகர்ப் பகுதியில் இஸ்ரேல் நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக லெபனான் சிவில் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
ஹரூஃப் - ஸெப்தீன் (Zebdine) நகரங்களை இணைக்கும் வீதியில் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிளை இலக்குவைத்து இஸ்ரேலிய ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வாரமாக லெபனான் மீது இஸ்ரேல் தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. இதுவரை பலர் உயிரிழந்தும் காயமடைந்தும் உள்ளனர்.
அதேவேளை, அமெரிக்கா தலைமையிலான மத்தியஸ்தத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்ட போர் நிறுத்தம் அமுலில் இருந்தாலும், தெற்கு லெபனானில் உள்ள பல கிராமங்களை இஸ்ரேலிய படைகள் தொடர்ந்து ஆக்கிரமித்துள்ளதுடன், அங்கிருந்து வெளியேற மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.