இஸ்ரேல் டெல்அவி தாக்குதலிற்கு பதிலடி
யேமனின் ஹொடெய்டா நகரின் மீது இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
யேமனின் செங்கடல் துறைமுக நகரான ஹொடெய்டா மீது தாக்குதலில் பெருமளவு உயிர்த்சேதங்கள் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இஸ்ரேலின் விமானங்கள் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக இஸ்ரேலின் இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை இஸ்ரேல் தலைநகர் மீது ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் ஆளில்லா விமானதாக்குதலை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
இஸ்ரேலிய பிரஜைகளிற்கு தீங்கு விளைவித்ததை தொடர்ந்து யேமனின் ஹெளத்தி கிளர்ச்சியாளர்களிற்கு செய்தியொன்றை தெரிவிப்பதற்காகவே இந்த தாக்குதல் இடம்பெற்றதாக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் யோவ்கலன்ட் தெரிவித்துள்ளார்.
ஹெடெய்டாவில் தற்போது பற்றி எரிந்கொண்டிருக்கும் தீ மத்திய கிழக்கு முழுவதும் தெரிகின்றது அதன் முக்கியத்துவம் தெளிவானது என அவர் தெரிவித்துள்ளார்.
ஹெளத்திகள் எங்களிற்கு எதிராக 200 தடவை தாக்குதல்களை மேற்கொண்டார்கள் முதல் தடவை அவர்கள் எங்கள் பொதுமக்களை தாக்கினார்கள் நாங்கள் தாக்கினோம் தேவைப்பட்டால் எந்த இடத்திலும் இதனை செய்வோம் என அவர் தெரிவித்துள்ளார்.