தொடரும் இஸ்ரேலின் பதிலடி ; வெளியேறிய 6 லட்சம் பாலஸ்தீனியர்கள்
இஸ்ரேல்-ஹமாஸ் இடையே நடைபெற்று வரும் இடைவிடாத தாக்குதலுக்கு மத்தியில் ஐக்கிய நாடுகள் சபையின் செய்தித் தொடர்பாளர் ஃபர்ஹான் ஹக் மே மாதம் 6ம் திகதி முதல் ராஃபாவில் இருந்து கிட்டத்தட்ட 600,000 பாலஸ்தீனியர்கள் இடம்பெயர்ந்தனர் என ஐ.நா தெரிவித்துள்ளது.
இது காசாவின் மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் ஆகும். தொடரும் இஸ்ரேலிய தரைப்படை நடவடிக்கைகளால் ஏற்பட்ட பாதுகாப்பு சீர்குலைவே இதற்குக் காரணம் என கூறப்படுகிறது.
மே 14 மற்றும் 15 ஆம் திகதிகளில், இஸ்ரேலிய ராணுவம் வடக்கு காசாவில் உள்ள 19 சுற்றுப்புறங்களுக்கு இரண்டு புதிய வெளியேற்ற உத்தரவுகளை வழங்கியது.
மே 6 முதல் வழங்கப்பட்ட உத்தரவுகளின் எண்ணிக்கையை இது ஐந்தாக உயர்த்தியது. கடந்த 48 மணி நேரங்களில் மட்டும் சுமார் 150,000 பேர் ராஃபாவில் இருந்து வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் அதன் நெருங்கிய நட்பு நாடுகளின் எச்சரிக்கைகளை மீறி, இஸ்ரேலிய ராணுவம் ராஃபாவிற்குள் தரைப்படைகளை நகர்த்துவதைத் தொடர்கிறது.
இஸ்ரேலின் இந்த நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில், அமெரிக்கா வெடிபொருள் மற்றும் முக்கிய தளவாடங்களை இஸ்ரேலுக்கு அனுப்புவதை இடைநிறுத்தியது.
இந்த மோதலில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் காயங்களின் எண்ணிக்கை குறித்து ஐ.நா எந்த தகவலையும் வெளியிடவில்லை.