ராபா நகரம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு கனடா கண்டனம்
காசாவின் ராபா நகரம் மீது இஸ்ரேல் படையினர் மேற்கொண்ட தாக்குதல்களுக்கு கனடா கண்டனம் வெளியிட்டுள்ளது.
லிபரல் அரசாங்கத்தின் அமைச்சர்கள் இவ்வாறு தங்களது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
பலஸ்தீன மக்கள் அடைக்கலம் பெற்றுக்கொண்ட பிரதானமான இடமாக ராபா காணப்படும் நிலையில் இந்த தாக்குதல் முன்னெடுக்கப்படுகின்றது.
இந்த தாக்குதல் சம்பவம் கவலையளிப்பதாக கனடிய வெளிவிவகார அமைச்சர் மெலெனி ஜோலி தெரிவித்துள்ளார்.
ராபா நகர் மீதான படையெடுப்பு பெண்கள், சிறுவர்கள் மற்றும் அப்பாவி சிவிலியன்களின் உயிர்களுக்கு ஆபத்தாக அமையும் என அவர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் நடவடிக்கை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விரைவில் இரு தரப்பிற்கும் இடையில் போர் நிறுத்தம் அமுல்படுத்தப்படும் என எதிர்பார்ப்பதாக ஜோலி தெரிவித்துள்ளார்.