அமெரிக்காவிடம் புதிய போர் விமானங்கள் வாங்க இஸ்ரேல் ஒப்பந்தம்
அமெரிக்காவிடமிருந்து புதிய போர் விமானங்களை வாங்க இஸ்ரேல் ஒப்பந்தம் செய்துள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் லாக்ஹீட் மார்ட்டின் மற்றும் போயிங் நிறுவனங்களிடம் விமானங்களை இஸ்ரேல் வாங்கவுள்ளது.
எதிர்காலத்தில் இஸ்ரேலின் வான்வழிப் பாதுகாப்பு சார்ந்த மேலாதிக்கத்தை நிலைநிறுத்தும் விதமாக இந்தஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இஸ்ரேல் இராணுவத்திற்கு ஒரு நீடித்த தரமான பாதுகாப்பு வழங்குவதற்காக எஃப்-35 மற்றும் எஃப்-15ஐஏ ரக விமானங்களைக் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இஸ்ரேல் இராணுவம் எந்த சூழலிலும் செயல்படுவதற்குத் தேவையான கருவிகள் மற்றும் வலிமையைக் கொண்டிருப்பதை உறுதி செய்யும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் மேலும் கூறினார்.