அல் ஷிபா மருத்துவமனைக்குள் நுழைந்த இஸ்ரேல் ராணுவம்; சல்லடை போட்டுத் தேடுதல்
கடந்த மாதம் 7 ஆம் திகதி ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் மீது திடீர் தாக்குதலை தொடர்ந்து காசா மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் ராணுவம், ஏறக்குறைய வடக்கு காசாவை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது.
தற்போது இஸ்ரேல் ராணுவம், ஹமாஸ் அமைப்பினர் எங்கு மறைந்துள்ளனர் எனத் தேடிவருகின்றனர்.
சல்லடை போட்டுத் தேடுதல்
தொடக்கத்தில் இருந்தே அல் ஷிபா மருத்துவமனையில் ஹமாஸ் அமைப்பினர் மறைந்து இருந்து செயல்பட்டு வருவதாக இஸ்ரேல் ராணுவம் குற்றம்சாட்டியிருந்தபோதும், மருத்துவ நிர்வாகம் அதனை மறுத்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று மருத்துவமனையின் வளாகத்திற்குள் இஸ்ரேல் ராணுவத்தின் டாங்கிகள் நுழைந்துள்ளன.
இஸ்ரேல் ராணுவத்தினர் மருத்துவமனை கட்டடத்திற்குள் சென்று அவசரப்பிரிவு, ஆபரேசன் நடைபெறும் இடங்கள், திவிர சிசிக்சை பிரிவுகள் என எல்லா இடங்களில் சென்று ஹமாஸ் அமைப்பினர் செயல்பாடு உள்ளதா என ஆராய்ந்துள்ளனர்.
இந்த தகவலை அல் ஷிபா மருத்துவமனையின் இயக்குனர் முகமது தெரிவித்துள்ளார். ஹமாஸை முறியடிக்கும் வகையில் தெற்கு காசாவில் தங்களது பிரசாரத்தை மேற்கொள்ள இஸ்ரேல் ராணுவம் திட்டமிட்டுள்ள நிலையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் போர் நிறுத்த தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது.
அதேவேளை இரு தரப்புக்கு இடையிலான போரால், ஆயிரக்கணக்கான மக்கள் ஷிபா மருத்துவமனையில் இருந்து வெளியேறிய நிலையில், குழந்தைகள் உள்பட நூற்றுக்கணக்கானோர் உயிர் பிழைப்பதற்காக அங்கு போராடி வருவதாகவும் கூறப்படுகின்றது.