அமெரிக்காவில் இஸ்ரேலிய தூதரக பணியாளர்கள் சுட்டுக்கொலை!
அமெரிக்காவின் வொசிங்டன் நகரில் யூத அருங்காட்சிசாலையொன்றிற்கு அருகில் இஸ்ரேலிய தூதரக பணியாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
காசா மக்களிற்கு உதவுவது குறித்த நிகழ்வில் கலந்துகொண்டுவிட்டு வெளியேறிக்கொண்டிருக்கையில் ஆண் ஒருவரும் பெண்ணும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபரின் பெயர் எலியஸ் ரொட்ரிகோஸ் என தெரிவித்துள்ள பொலிஸார் தடுத்துவைக்கப்பட்டிருந்தவேளை சந்தேகநபர் சுதந்திர பாலஸ்தீனம் என கோசமிட்டார் என தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தை பயங்கரவாத கோணத்திலும் ஆராய்வோம் என தெரிவித்துள்ள பொலிஸ் அதிகாரிகள் இது குரோதம் காரணமான துப்பாக்கிசூடா என விசாரணை செய்யவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்