விமான கடத்தலை முறியடித்த இந்திய விமானிக்கு இஸ்ரேல் அரசின் வீரதீரச் செயல் விருது!
Flyduai விமான கடத்தலை தடுத்த இந்திய பைலட் ஸ்மித் மச்சாருக்கு உலகம் முழுவதிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் இஸ்ரேல் அரசின் வீரதீரச் செயல் விருது ஸ்மித் மச்சாருக்கு வழங்கப்படவுள்ளது.
இதற்கான அறிவிப்பை இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்ஸாக் வெளியிட்டுள்ளார்.

ஃபிளை துபாய் விமானத்தையும் பயணிகளையும் காப்பாற்றிய 6 பேருக்கு டெல் அவிவ் நகரிலுள்ள அதிபர் மாளிகையில் நேற்று நடைபெற்ற விழாவில் விருது வழங்கப்பட்டது.
அப்போது அதிபர் ஐசக் ஹெர்சாக்,‘‘இஸ்ரேலின் உயரிய வீரதீரச் செயல் விருது விரைவில் பைலட் ஸ்மித் மச்சாருக்கு வழங்கப்படும். அவர் விரைந்து குணமடைய நான் வாழ்த்துகிறேன்.
அவர் குணமடைந்து வீடு திரும்பியதும் அவருக்கான விருது வழங்கப்படும்" என இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்ஸாக் தெரிவித்துள்ளார்.