ஜனாதிபதி டிரம்பை சந்திக்கும் இஸ்ரேல் பிரதமர்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அடுத்த வாரம் சந்திக்க திட்டமிட்டு வருவதாக கூறப்படுகின்றது. பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இதற்காக அவர் வாஷிங்டன் டி.சி.க்கு பயணம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
எனினும் இந்த பயணம் இறுதி செய்யப்படவில்லை என்றும் அவர் புரோஸ்டேட் அறுவை சிகிச்சை செய்து கொண்டு குணமடைவதால் நெதன்யாகுவின் உடல்நிலையை பொறுத்து இதுகுறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
டிரம்பை சந்திக்கும் முதல் வெளிநாட்டுத் தலைவர்
அதேவேளை தற்போதைய தகவல்களின் படி பயணம் செய்தால், தனது இரண்டாவது பதவிக்காலத்தில் ஜனாதிபதி டொனால்டு டிரம்பை சந்திக்கும் முதல் வெளிநாட்டுத் தலைவராக நெதன்யாகு இருப்பார்.
முன்னதாக இஸ்ரேலுக்கு தற்காப்பு கருவிகள் வழங்கியதற்காக ஜனாதிபதி டிரம்பிற்கு பெஞ்சமின் நெதன்யாகு ஜனவரி 26 ஆம் திகதி நன்றி தெரிவித்தார். இது குறித்த அவரது எக்ஸ் பதிவில்,
இஸ்ரேலுக்கு தன்னைத் தற்காத்துக் கொள்ளவும், நமது பொதுவான எதிரிகளை எதிர்கொள்ளவும், அமைதி மற்றும் செழிப்பு நிறைந்த எதிர்காலத்தைப் பாதுகாக்கவும் தேவையான கருவிகளை வழங்குவதாக நீங்கள் அளித்த வாக்குறுதியைக் காப்பாற்றியதற்காக ஜனாதிபதி டிரம்பிற்கு நன்றி என பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்