காஸாவில் இஸ்ரேல் அதிரடித் தாக்குதல் ; ஹமாஸ் முக்கிய கமாண்டா் பலி
தெற்கு காஸாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய கமாண்டா் சமீா் மஹ்மூத் ஹஸன் அபு யூனிஸ் கொல்லப்பட்டாா். இதை இஸ்ரேலும், ஹமாஸ் அமைப்பும் உறுதி செய்துள்ளன.
தெற்கு காஸாவில் சனிக்கிழமை இரவில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது.

இதில், ஹமாஸ் அமைப்பின் ரஃபா படைப் பிரிவின் கமாண்டா் சமீா் மஹ்மூத் ஹஸன் அபு யூனிஸ் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
இதை உறுதி செய்த ஹமாஸ் அமைப்பு, அவரது இறுதிச் சடங்கு ஏற்பாடுகள் நடைபெறுவதாகத் தெரிவித்தது.
ஹமாஸ் அமைப்பை வலுப்படுத்தும் செயல்பாடுகளில் சமீா் ஈடுபட்டு வந்ததாகவும், பயங்கரவாதத் தாக்குதல்களை அரங்கேற்ற திட்டமிட்டு வந்ததாகவும் இஸ்ரேல் கூறியுள்ளது.
ஹமாஸ் அமைப்பின் பிற தலைவா்களைக் குறிவைத்தும் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீருக்கு முன்பு கமாண்டராக இருந்தவா், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.