லெபனானிலிருந்து வெளியேறுமாறு பல நாடுகள் அறிவுறுத்தல்
லெபனானில் இருந்து வெளியேறுமாறு தமது நாட்டு பிரஜைகளுக்கு பல நாடுகள் அறிவுறுத்தல் வழங்கியுள்ளன.
அமெரிக்கா தனது நாட்டு பிரஜைகளை உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளது.
கிடைக்கும் டிக்கெட்டையே பயன்படுத்தி லெபனானை விட்டு வெளியேறுமாறு அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.
ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் துறை தலைவர் இஸ்மாயில் ஹனியா ஈரானின் தெஹ்ரானில் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
இஸ்ரேலியா படையினர் ஹிஸ்புல்லா தீவிரவாத இயக்க சிரேஸ்ட தலைவரான பவட்ஸ் க்ரூ என்பவரையும் படுகொலை செய்திருந்தது.
இதனை தொடர்ந்து பிராந்திய வலயத்தில் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் பிராந்திய வலயத்தில் போர் போர்ச்சூழல் உருவாகியுள்ளது.
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் நிலவி வரும் பதற்ற நிலையை தணிப்பதற்கு மேற்குலக நாடுகள் முயற்சித்து வருகின்றன.
எனினும் போர் பதற்ற நிலைமை காரணமாக தமது நாடுகளின் பிரஜைகளை லெபனானை விட்டு வெளியேறுமாறு கோரி உள்ளன.
குறிப்பாக பிரித்தானியா சுவீடன், பிரான்ஸ், கனடா ஜோர்டான், அமெரிக்கா போன்ற பல நாடுகள் இவ்வாறு லெபனானை விட்டு வெளியேறுமாறு தமது நாட்டு பிரஜைகளுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளன.