ஈரானுக்கு எதிரான போரிலிருந்து விலகிய இத்தாலி!
ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் முன்னெடுக்கும் கூட்டு இராணுவ நடவடிக்கைகளுக்கு இத்தாலி இனி ஆதரவு வழங்காது என இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி ( Giorgia Meloni) தெரிவித்துள்ளார்.
இத்தாலி பாராமன்றத்தில் உரையாற்றும் போதே பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி ( Giorgia Meloni) இதனைத் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்போது, மத்திய கிழக்கிலிருந்து தனது நாட்டுப் படைகளை மீளப்பெறவுள்ளதாக அவர் ( Giorgia Meloni) அறிவித்துள்ளார்.
அதோடு மத்திய கிழக்கிற்கு எதிரான போரில் இத்தாலி ஒருபோதும் பங்காளியாக இருக்காது எனவும், ஈரானுக்கு எதிரான போரில் இத்தாலி பங்கேற்காது எனவும் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி ( Giorgia Meloni) அங்கு மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.