தூக்கம் கலைந்து இடையே வந்த மகள்..! நியூசிலாந்து பிரதமரின் க்யூட் வீடியோ!!
நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் லைவ்வில் நேற்று உரையாடிக்கொண்டிருக்கும் போது படுக்கையிலிருந்து வந்த மகளை மீண்டும் படுக்கைக்கு அனுப்பிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
ஜெசிந்தா நேற்று பேசிக்கொண்டிருக்கும் அப்போது அவரது மகள் படுக்கையறையிலிருந்து எழுந்து வந்துள்ளார்.
அப்போது “நீங்கள் படுக்கையில் இருக்க வேண்டும், அன்பே. இது தூங்கும் நேரம். மீண்டும் படுக்கைக்குச் செல்லுங்கள், நான் ஒரு நொடியில் வந்து உங்களைப் பார்க்கிறேன். பாட்டி உங்களை படுக்கைக்கு அழைத்துச் செல்வார்” என்று ஜெசிந்தா கூறி குழந்தையை படுக்கைக்கு அனுப்பிவைத்தார்.
இந்த வீடியோ பல பார்வையாளர்களை மனதை மிகவும் கொள்ளை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Jacinda Ardern interrupted by daughter during live event pic.twitter.com/djMJUbQkV6
— The Independent (@Independent) November 9, 2021