சீனாவின் அரசியலில் சேர விரும்பும் சூப்பர் ஸ்டார் ஜாக்கி சான்!

China Election President Jackie Chan
By Shankar Jul 14, 2021 08:02 PM GMT
Shankar

Shankar

Report

சூப்பர் ஸ்டார் அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா என்ற குழப்பத்திலும், நிச்சயம் வருவார் என்ற நம்பிக்கையிலும் தமிழகத்தில் தசாப்தங்கள் கழிந்தன.

தற்போது மற்றுமொரு சூப்பர் ஸ்டார் அரசியலில் சேர விருப்பம் தெரிவித்துள்ளார். இது உலக சூப்பர் ஸ்டார் ஜாக்கி சானின் (Jackie Chan) விருப்பம்.

நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜாக்கி சான், சீன கம்யூனிஸ்ட் கட்சியைப் பாராட்டினார். அந்தக் 'கட்சியின் மகத்துவத்தைக் பார்க்கிறேன்' என்றும் தெரிவித்தார்.

ஹாங்காங்கில் ஜனநாயகம் வேண்டும் என்று கோரும் மக்களின் மீது அடக்க்குமுறையை கட்டவிழ்த்துவிடும் சீன அரசின் போக்கை ஏற்கனவே ஆதரித்து பேசியிருக்கிறார் இந்த சூப்பர் ஸ்டார்.

தற்காப்பு கலை வீரர் ஜாக்கி சான், தற்காப்பில்லாமலா இப்படி பேசியிருப்பார்? அதுமட்டுமல்ல, சீன கம்யூனிஸ்ட் கட்சியில் (Chinese Communist Party) சேர விரும்பும் தனது ஆர்வத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சி உருவாகி 100 ஆண்டுகள் ஆகிறது. அதனைக் ஆளும் கட்சி கொண்டாடுகிறது. அதை முன்னிட்டு அதிபர் ஜீ ஜின்பிங் (President Xi Jinping) ஜூலை 1ஆம் தேதி ஆற்றிய உரையை மதிப்பிடுமாறு சீனத் திரைப்பட பிரபலங்களை கம்யூனிஸ்ட் கட்சி அழைத்திருந்தது.

தியனன்மென் சதுக்க படுகொலை (Tiananmen Square massacre) நடந்த இடத்திலிருந்து குடிமக்களுக்கு அதிபர் மக்களுக்கு உரையாற்றினார். இந்த நிகழ்வில், சீன திரைப்பட சங்கத்தின் துணைத் தலைவராக இருக்கும் ஜாக்கி சான், சி.சி.பி தனது வாக்குறுதிகளை 'நிறைவேற்றியதற்காக' பாராட்டினார்.

"ஆளும் கட்சியின் (Communist Party of China) மகத்துவத்தை என்னால் காண முடிகிறது, அது" தான் சொல்வதை செய்யும்.. நான் கட்சியின் கட்சியின் உறுப்பினராக விரும்புகிறேன்" என்று அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது,

அதிரடி சூப்பர் ஸ்டார் 2013 முதல் சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாட்டில் (Chinese People's Political Consultative Conference) உறுப்பினராக இருந்து வருகிறார்.

சீனாவின் உயர்மட்ட ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்கள் முக்கிய கொள்கை விஷயங்கள் குறித்து அரசாங்கத்திற்கு கருத்துக்களை வழங்குவார்கள்.

2019 ஆம் ஆண்டில், ஜாக்கி சான் தனது சொந்த நகரமான ஹாங்காங்கில் ஜனநாயக சார்பு எதிர்ப்பாளர்கள் மீது சீனாவின் வன்முறை ஒடுக்குமுறை குறித்து அவர் கூறிய கருத்துக்களுக்கு பரவலான விமர்சனங்கள் எழுந்தன. அதோடு ஜாக்கி சானுக்கு சர்வதேச அளவில் பின்னடைவும் ஏற்பட்டது.

மாணவ போராட்டக்காரர்களுக்கு எதிரான அரசாங்க நடவடிக்கைகளை அவர் கண்டிக்க மறுத்துவிட்டார், சீனாவின் புதிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை கண்டிக்க சர்வதேச சமூகம் இணைந்து செயல்பட்ட நிலையிலும் ஜாக்கிசான் மவுனம் காத்தார்.

சவுத் சீனா மார்னிங் போஸ்டு (South China Morning Post) பத்திரிகைக்கு ஜாக்கி சான் அளித்த பேட்டியில், "நான் பல நாடுகளுக்குச் சென்றுள்ளேன், அண்மை ஆண்டுகளில் நம் நாடு வேகமாக வளர்ந்து வருகிறது என்று நான் சொல்ல முடியும்.

நான் எங்கு சென்றாலும் சீனராக இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன், மற்றும் ஐந்து- நட்சத்திரமிட்ட சிவப்புக் கொடி 'உலகம் முழுவதும் எங்கும் மதிக்கப்படுகிறது" என்று தெரிவித்தார்.

"ஹாங்காங்கும் சீனாவும் எனது பிறப்பிடம், என் வீடு. சீனா எனது நாடு, என் நாட்டை நேசிக்கிறேன், நான் எனது வீடான ஹாங்காங்கையும் நேசிக்கிறேன். ஹாங்காங்கில் விரைவில் அமைதி திரும்பும் என்று நம்புகிறேன்" என ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் ஜாக்கி சான் தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US