யாழ் ஆவா குழு உறுப்பினர்கள்; விசாரணையில் திடுக்கிடும் தகவல்!
கொலை வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்ட ஆவா குழு உறுப்பினர்கள் இரண்டு பேர் விசாரணைகளுக்காக 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், விசாரணையில் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களுக்கு ஆட்களை விநியோகிக்கும் பகிர் தகவல் வெளியாகியுள்ளது.
யாழ்ப்பாணம் - மானிப்பாய் பகுதியில், கடந்த 2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பிலேயே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சர்வதேச சிவப்பு எச்சரிக்கை
அந்த சம்பவத்தின் பின்னர் நாட்டை விட்டு இந்தியாவுக்கு தப்பிச் சென்ற குறித்த சந்தேகநபர்கள், அண்மையில் மீண்டும் இலங்கைக்குத் திரும்பியபோது, கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேவேளை சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காகச் சர்வதேச சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், சந்தேகநபர்கள் மீண்டும் நாடு திரும்பியபோது, கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் கைது செய்யப்பட்டதன் பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக மத்திய குற்றத்தடுப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்புகளைப் பேணி வந்துள்ளதோடு, துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களுக்கு ஆட்களை விநியோகிக்கும் சட்டவிரோத செயலில் ஈடுபட்டு வந்துள்ளமையும் காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது