முகநூலில் மலர்ந்த காதல்! யாழில் இருந்து வெளிநாடு சென்ற பெண்ணிற்கு ஏற்பட்ட நிலை
முகநூல் மூலம் அறிமுகமாகி கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்த யாழ்.பருத்தித்துறையை சேர்ந்த பெண்ணும் தமிழகத்தை சேர்ந்த இளைஞரும் திருமணம் செய்துக் கொண்டுள்ளனர்.
தமிழகத்தில் சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்தவர் நபருக்கும், யாழ்.மாவட்டம் பருத்தித்துறையை சேர்ந்த குறித்த பெண்ணுக்கும் முகநூல் மூலம் நட்பு ஏற்பட்டுள்ளது.
பின்னர் நாளடைவில் இந்த நட்பு காதலாக மாற, இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் சுற்றுலா விசா மூலம் அந்த பெண் யாழ்ப்பாணத்தில் இருந்து சேலம் வந்தடைந்துள்ளார். இதையடுத்து அங்குள்ள கோவில் ஒன்றில் இருவரும் திருமணமும் செய்து கொண்டனர்.
தொடர்ந்து அவர்களது திருமணத்தை பதிவு செய்ய இருவரும் அரசு அலுவலகத்தை நாடிய போது திருமணத்தை பதிவு செய்வதில் சட்ட சிக்கல் இருப்பதால் தடையில்லா சான்று வேண்டுமென்று அதிகாரிகள் கேட்டுள்ளனர்.
இதனால் செய்வதறியாது திணறிய காதல் ஜோடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.
இதற்கிடையே விசா காலமும் விரைவில் முடிவடைவதால் என்ன செய்வதென்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.