கனடாவிற்கு செல்ல முயன்று வியட்நாமில் உயிரிழந்த யாழ் குடும்பஸ்தர்; மனைவியின் உருக்கமான கோரிக்கை!
கனடாவிற்கு செல்ல முற்பட்ட இலங்கையர்கள் வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு தற்கொஅலைக்கு முயன்ற நிலையில் உயிரிழந்த யாழ்ப்பாணம் சாவகச்சேரியைச் சேர்ந்த குடும்பஸ்தர் சுந்தரலிங்கம் கிரிதரனின் உடலை இலங்கைக்கு எடுத்துவர நடவடிக்கை எடுக்குமாறு அவரது மனைவி உருக்கமான கோரிக்கையை அரசாங்கத்திடம் விடுத்துள்ளார்.
வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 303 இலங்கையர்களில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் அகதியொருவர் தற்கொலைக்கு முயற்சித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக நேற்றைய தினம் தகவல் வெளியாகியிருந்தது.

சம்பவத்தில் யாழ்ப்பாணம் - சாவகச்சேரி, கல்வயலை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான சுந்தரலிங்கம் கிரிதரன் (வயது 37) என்பவரே உயிரிழந்துள்ளார்.
அரசாங்கத்திடம் கோரிக்கை
இந்த நிலையில் உயிரிழந்த கிரிதரனின் மனைவி கருத்து தெரிவிக்கும் போது, அங்கிருந்து கணவரின் உடலை இங்கே கொண்டு வர 30 இலட்சம் ரூபா வரையில் தேவைப்படும் என தெரிவித்து என்னிடம் கையொப்பம் கேட்டனர்.

அந்த 30 இலட்சம் இருக்குமாயின் நான் ஏன் என்னுடைய கணவரை கடல் கடந்து அனுப்ப வேண்டும் என கேள்வி எழுப்பிய அவர், எமது குடும்ப வறுமையை போக்கவே கடல் கடந்து என்னுடைய கணவர் சென்றார்.
 ஆனால் இப்படி ஒரு பேரிடி ஏற்படும் என நான் எதிர்பார்க்கவில்லை. 
 
இந்நிலையில் கடைசியாக நான் அரசாங்கத்திடம் விடுக்கும் கோரிக்கை, அப்பா இல்லை என்பதை எனது குழந்தைகளுக்கு காட்டுவதற்காக அவரது உடலை எம்மிடம் கொண்டு வந்து சேர்த்து விடுங்கள் என கதறியழுது கோரிக்கை விடுத்துள்ளார். 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        