கரப்பான் பூச்சியில் இருந்து பீரை தயாரிக்கும் நாடு! இலங்கை மதிப்பில் இவ்வளவா?
ஜப்பானில் கரப்பான் பூச்சியில் இருந்து தயாரிக்கப்படும் பீர் இலங்கை மதிப்பில் சுமார் 1191 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜப்பான் நாட்டில் கரப்பான் பூச்சியில் இருந்து பீர் தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்த பீர் வகைக்கு கொஞ்சு சூர் (Konchu Sour) அல்லது இன்செக்ட் சூர் (Insect Sour) என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.
மேலும், கபுடோகாமா (Kabutokama) எனப்படும் பாரம்பரிய முறையில் வடிகட்டப்படும் இந்த பீர் ஜப்பான் நாட்டில் தனிச்சிறப்பு பெற்றிருக்கிறது. 20-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்து இந்த பீரை ஜப்பானியர்கள் தயாரித்து குடித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நன்னீரில் வாழும் கரப்பான் பூச்சிகளை பிடித்து அவற்றை வெந்நீரில் வேகவைத்து, பின்னர் இரண்டு நாட்களுக்கு அதை உற வைக்கின்றனர். பின்னர் அதிலிருந்து எடுக்கப்படும் சாறு பீராக மாற்றப்படுகிறது. இந்த கரப்பான் பூச்சி பீர் பாட்டிலின் விலை இலங்கை மதிப்பில் சுமார் 1191 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.