ஜப்பானில் 7 பேரைக் கொண்ட கொலையாளிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்
ஜப்பானில் ஏழு பேரைக் கொண்ட கொலையாளி ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டைனை விதித்ததுடன், இன்றைய தினம் அந்த தண்டனை நிறைவேற்றப்பட்டது.
தலைநகர் டோக்கியோவில் கடந்த 2008ம் ஆண்டில் இந்த படுகொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
டொமொஹிரோ காட்டோ என்ற நபர் தூக்கிட்டு கொல்லப்பட்டதாக ஜப்பானிய நீதி அமைச்சர் யோஷிசா புருகாவா தெரிவித்துள்ளார்.
சர்வதேச அளவில் விமர்சனங்கள் வெளியிடப்பட்டாலும் ஜப்பானில் தொடர்ந்தும் மரண தண்டனை அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.
பாரதூரமான குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாகனத்தில் மோதியும் கத்தியால் குத்தியும் நபர்களை கொலை செய்துள்ளார்.
வாகனத்தை பாதசாரிகள் மீது மோதச் செய்ததன் மூலம் மூன்று பேரையும் கத்தியைக் கொண்டு தாக்கி நான்கு பேரையும் கொலை குறித்த நபர் கொலை செய்துள்ளார்.
கொலையாளிக்கு கடந்த 2011ம் ஆண்டு மரண தண்டனைன விதிக்கப்பட்டது.