24 ஆண்டுகளில் பெரும் வீழ்ச்சியை சந்தித்த ஜப்பான்!
24 ஆண்டுகளிற்கு பின்னர் ஜப்பானிய யென் அமெரிக்க டொலருக்கு நிகராக பெரும் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. அதன்படி, நேற்றைய தினம் அமெரிக்க டொலருக்கு எதிராக 140 யென் என்ற முக்கிய உளவியல் அளவை மீறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆசியாவில் உள்ள பல மத்திய வங்கிகள் அமெரிக்காவைப் பிரதிபலிக்கும் வகையில் கடன் வாங்கும் செலவை உயர்த்தியுள்ள நிலையில், ஜப்பான் அதைப் பின்பற்றவில்லை என கூறப்படுகின்றது
அத்துடன் ஜப்பான் வங்கி பொருளாதார மீட்சிக்கு ஆதரவாக அதன் மிகக் குறைந்த வட்டி விகிதங்களை பராமரித்து வருகிறது. மேலும் அமெரிக்க டொலர் மற்றும் பிற முக்கிய நாணயங்களுக்கு எதிராக யென் மதிப்பு வீழ்ச்சியடைந்ததற்கு இதுவும் ஒரு காரணம்.
2016 க்குப் பிறகு முதல் முறையாக ஏற்பட்ட சரிவு
இதனிடையே அக்டோபர் 2016 க்குப் பிறகு முதல் முறையாக பிரித்தானிய பவுண்ட் சுமார் 5 வீதம் சரிந்தது. இந்நிலையில் வரும் மாதங்களில் அமெரிக்க மத்திய வங்கி தொடர்ந்து வட்டி விகிதங்களை உயர்த்தும் என்று பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவல் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை அடுத்து, வாரத்தின் தொடக்கத்தில் அமெரிக்க டொலர் பெறுமதி சடுதியாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.